38வது நாளாக நீடிக்கும் விவசாயிகள் போராட்டம் -நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை

 நாளை மறுநாள் மத்திய அரசுடன் ஏழாவது


சுற்றுப்பேச்சுவார்த்தை நடத்த உள்ள விவசாயிகள், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி டெல்லியை நோக்கி பேரணிகள் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் கடந்த ஆறாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது விவசாயிகளின் 4 கோரிக்கைகளில் இரண்டு கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இருப்பினும் அடுத்தக் கட்டப் பேச்சுகளின் போது சுமுகமான முடிவு எட்டப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லியை அடுத்த சிங்கூ எல்லைப்பகுதியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 38வது நாளை எட்டியுள்ளது. 

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்