அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் ஈபிஎஸ்-ஓபிஎஸ் நேரில் விசாரிப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சிகிச்சை பெற்று வரும் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் வருகை புரிந்து உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தனர்.
கடந்த 6 ஆம் தேதி அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், இன்று எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவரது உடல்நலம் குறித்து முதல்வரும் துணை முதல்வரும் கேட்டறிந்தனர்.