போலி நீட் சான்றிதழ் வழங்கிய மாணவியின் தந்தை கைது
ராமநாதபுரத்தைச் சேர்ந்த தீக்ஷா என்ற மாணவி கடந்த டிசம்பர் 7-ம் தேதி சென்னையில் நடந்த மருத்துவக் கலந்தாய்வில், 27 மதிப்பெண் பெற்றிருந்த நிலையில் 610 மதிப்பெண் பெற்றதாக போலி சான்று அளித்துள்ளார். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்ததாக அவர் வழங்கிய சான்றிதழ் போலி என்று உறுதி செய்த பின்னர் பெரியமேடு காவல்துறையினர் விசாரணை தொடங்கியது.
விசாரணை தொடர்பாக ரெண்டு முறை சம்மன் அனுப்பிய நிலையில், மாணவி தரப்பில் இருந்து யாரும் ஆஜராகமல் தலைமறைவாக இருந்ததால், மாணவியின் தந்தை பல்மருத்துவர் பாலசந்திரனை கைது செய்ய காவல்துறை தீவரம் காட்டியது .
இந்நிலையில் பெங்களூருவில் இருந்த பாலச்சந்திரனை கைது செய்து சென்னை அழைத்து வந்து இருக்கிறது காவல்துறை. அவரிடம் முறைக்கேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டு இருக்கிறது. இதன்பின், ஜனவரி 11 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் மாஜிஸ்திரேட் ஆணை பிறப்பித்து இருக்கிறது.