பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு
இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்துவ மதப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வரும் பால் தினகரன் அவர்களுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு
இயேசு அழைக்கிறார் என்ற குழும்பத்திற்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என புகார் வந்ததாகவும் இந்த புகாரின் அடிப்படையில் வருமானத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் தற்போது சோதனை நடைபெற்று வருவதாகவும் இந்த சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது
நேற்று பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்ததற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா என எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது