தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று போகிப்பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது -
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று போகிப்பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று ஆய்வு.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று (13.01.2021) போகிப்பபண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், காவலர் குடியிப்புகள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தார்.
உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் தலைமையில் காவலர்கள் இன்று தேவையில்லாதவற்றை கழித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு சுத்தம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பல்வேறு காவல் நிலையங்களுக்கு சென்று காவல் நிலையங்கள் மற்றும் அதன் குடியிருப்புகளை சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதாக என்பது ஆய்வு செய்து வருகிறார். இன்று காலை தூத்துக்குடி மத்தியபாகம் காவலர் குடியிருப்புகளுக்கு சென்று பார்வையிட்டு, தேவையில்லாதவற்றை அகற்றவும், சுத்தமாக வைக்கவும், காலியாக உள்ள நிலப்பரப்புகளில் மரங்கள் நட்டு வளர்க்கவும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆயவின்போது தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், வடபாகம் காவல் ஆய்வாளர் திரு. அருள், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் திரு. ஜெயப்பிரகாஷ், தூத்துக்குடி தென்பாகம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. பிரேமா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.