சென்னையில் வழிகாட்டுதல் நெறிகளுடன் புத்தகக்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி
வழிகாட்டுதல் நெறிகளுடன் பிப்ரவரி மாதத்தில் 44வது சென்னைப் புத்தகக் காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது.
வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை புத்தகக் காட்சிகள் நடைபெறும். 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள்,கைக்குழந்தைகளை புத்தகக் காட்சிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரங்கில் பார்வையாளர்கள் 3 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும், குளிர்சாதனம் பயன்படுத்தக்கூடாது , உள்ளே செல்லவும் வெளியேறவும் தனித்தனி வாயில்கள் அமைக்க வேண்டும்.
அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசு அனுமதியைத் தொடர்ந்து விரைவில் புத்தகக்காட்சியின் தேதிகள் முடிவு செய்யப்படும் என்று பாபசி அறிவித்துள்ளது