' சேதமடைந்த குடிசையும் கூழும்தான் வாழ்க்கை! ' - பரிதாப நிலையில் 'பரியேறும் பெருமாள்' தங்கராசு

 


பரியேறும் பெருமாள்' படத்தில் நடிகர் கதிரின் தந்தையாக நடித்த நாட்டுப்புற கலைஞர் தங்கராசு வசிக்க ஒரு நல்ல வீடு கூட இல்லாத நிலையில், அவதிப்படுகிறார். இதையடுத்து, அவரின் வீட்டை சீரமைத்து தர நெல்லை மாவட்ட ஆட்சியர் முன் வந்துள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படம் செம ஹிட்டாகியது. இந்த படத்தில் நடிகர் கதிரின் தந்தையாக நடித்தவர்தான் நாட்டுப்புற கலைஞர் தங்கராசு. சுமார் 40 ஆண்டுகளாக பெண் வேடம் கட்டி நாட்டுப்புற கலைஞரான நடித்தவர் தங்கராசு. அவரின் திறமையை அறிந்தே மாரி செல்வராஜ் தன் முதல் படத்தில் நடிக்க அவர் வாய்ப்பு அளித்திருந்தார். தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டான படத்தில் நடித்திருந்தாலும், தங்கராசுவின் வாழ்க்கை மாறி விடவில்லை.

ஏழை நாட்டுப்புற கலைஞரான அவர் தன் மனைவி பேச்சிக்கனியுடன் எளிய சிதிலமடைந்த கூரை வீட்டில்தான் வசிக்கிறார். நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள இளங்கோ நகரில் தங்கராசுவின் சிதிலமடைந்த வீடு உள்ளது. நாட்டுப்புற கலைகள் எந்த கலைஞனுக்கும் வாயிறார சாப்பாடு போடுவதில்லை. நாட்டுப்புற கலைஞன் வேறு ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டதால்தான் தன் குடும்பத்தை நடத்த முடியும். அதற்கு, தங்கராசுவும் விதிவிலக்கல்ல. வெள்ளக்காய், பனங்கிழங்கு, எலுமிச்சை பழ விற்பனையில் ஈடுபடுவது தங்கராசுவின் வழக்கம்.image

இதற்கிடையே, கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரானா பாதிப்பால் தங்கராசுவின் பழ விற்பனையும் முடங்கிப் போனது. பணமிருந்தால் ஒரு வேளை உணவு இல்லையென்றால் கூழ் இதுதான் தங்கராசு அவரின் மனைவி பேச்சிக்கனியின் வயிற்றை நிரப்பும். வறுமையின் நிறம் சிவப்பு படத்தின் கதை அப்படியே இந்த கலைஞனுக்கு பெருந்தும் எனறாலும் மிகையில்லை.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்