சென்னை பல்லாவரத்தில் வீட்டில் வாசலில் வைத்தே திமுக பிரமுகர் படுகொலைசெய்யப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

 


சென்னை பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை நாகல்கேணி ஈஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் 56 வயதான கணேசன். இவருக்கு 50 வயதான முனியம்மா என்ற மனைவியும், இரண்டு பெண் ,ஒரு ஆண் மகனும் உள்ளனர். கணேசன் பம்மல் நகர 21ஆவது வட்ட கழக துணைச் செயலாளராக, திமுகவின் கட்சி பதவியில் இருந்துள்ளார்.

திங்கள் கிழமை இரவு தனியார் மருத்துவமனையில் பணிப்புரியும் தனது இளையமகளை பணிமுடித்து இருசக்கரவானத்தில் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்ட பிறகு, இரவு 8.30 மணியளவில் வீட்டு வாசலில் அமர்ந்து நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.

முகமூடிஅணிந்த இருவர் இருசக்கர வாகனத்தில் அங்கு வந்துள்ளனர், வாகனத்தை விட்டு இறங்கிய இருவரும் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் கணேசனை சரமாறியாக வெட்டியுள்னர்.

இதில் தலை, கழுத்து போன்ற பகுதிகளில் வெட்டுக்காயமடைந்த கணேசன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத அக்கம்பக்கத்தினர் சுதாரிப்பதற்குள், கணேசனை வெட்டிய கும்பல் மின்னல் வேகத்தில் தலைமறைவானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்கர்நகர் போலீசார் கணேசனை மீட்டு குரோம்பேட்டை அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலையே அவர் உயிர்பிரிந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 43 வயதான வீனஸ் என்ற பாலச்சந்தர், 42 வயதான மைனா குட்டி என்ற அன்பழகன், 34 வயதான சுகுமார் ஆகியோர் இந்த கொலையை செய்திருப்பதாகத் தெரியவந்தது.

பெருங்களத்தூரில் பதுங்கியிருந்த மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். கைதான வீனஸ் என்ற பாலச்சந்தர், படப்பை குணா என்ற பிரபல ரவுடியின் நண்பர் என்பது விசாரணையில் தெரியவந்தது ஈஸ்வரி நகரில் உள்ள ஒன்றரை ஏக்கர் புறம்போக்கு இடத்தை வீனஸ் என்ற பாலச்சந்தர் என்பவர் ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயன்றுள்ளார்.

இதை கணேசன் தடுத்து நிறுத்தி இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானமாகத்தான் அது இருக்க வேண்டும் என கூறி பாலச்சந்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் புறம்போக்கு இடத்தை விற்பனை செய்ய முடியாமல் கணேசன் ஓராண்டாகத் தடுத்து வந்ததால், ஆத்திரமடைந்த பாலச்சந்தர், தனது நண்பர்கள் அன்பழகன் மற்றும் சுகுமார் ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டுக் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து 3 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். திமுக பிரமுகர் வீட்டுவாசலில் வைத்தே வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்