சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த பணம்: போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்: அதிகாரிகள் பாராட்டு!
சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை ஆட்டோ ஓட்டுநர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
அவிநாசி சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த சந்திரமோகன் என்பவர்,வடக்கு ரத வீதியில் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் பணக் கட்டு கிடப்பதை கண்டார்.
உடனடியாக அந்தப் பணத்தை அவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சந்திரமோகனின் இந்த நேர்மைக்காக போலீசார் பாராட்டுத் தெரிவித்தனர்.