நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரம் : சென்னை புரோக்கர் கைது..!
நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் தேடப்படும், தலைமறைவு குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்த புரோக்கர் மோகன் என்பவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு புகார்தொடர்பாக விசாரணை நடத்தி வரும் CB CID போலீசார், அண்மையில் கேரளாவில் ரஷீத் என்ற புரோக்கரை கைது செய்திருந்தனர், இவர் கொடுத்த தகவலின் பேரில், புரோக்கர் மோகன் சிங்கப்பூரில் பதுங்கி இருக்கும் தகவலை உறுதி செய்த CB CID போலீசார், அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும், லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி உஷார்படுத்தி இருந்தனர்.
இந்த சூழலில ஏர் இந்தியா விமானம் மூலம் சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய புரோக்கர் மோகன், விமான நிலையத்தில் பிடிபட்டார். இவரை, ஒரு தனி அறையில் அடைத்து வைத்த குடியேற்றத்துறை அதிகாரிகள், பின்னர் CB CID வசம் ஒப்படைத்தனர்.