நள்ளிரவில் ரூ.16.50 லட்சம் பணத்துடன் பறக்கும் படையினரிடம் சிக்கிய அதிமுக பிரமுகர்!

 




அரூரில் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு அஞ்சி வீட்டில் இருந்து வெளியே வீசப்பட்டதாக கூறப்படும் ரூ.16.50 பணத்தை எடுத்து சென்ற அதிமுகவை  நிர்வாகியை பறக்கும் படையினர் பிடித்தனர். 

தருமபுரி மாவட்டம் அரூர் திருவிக நகரில் உள்ள ஆசிரியராக பணிபுரிபவர் குமார் என்பவரது வீட்டில் அதிமுகவினர் பணம் பதுக்கி வைத்திருப்பதாக அரூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வே.முத்தையனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து முத்தையன், வருமான வரி துறையினருக்கு தகவல் கொடுத்துவிட்டு, 4 தேர்தல் பறக்கும் படையினர் குழுவ வீடு முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தினர். 

தொடர்ந்து இரவு 2 மணியளவில் குமார் மனைவி கவிதா என்பவர் ஒரு பையில் பணத்தை கட்டி வெளியில் வீசியுள்ளார். அந்த பணத்தை அதிமுகவை சேர்ந்த நேதாஜி என்பவர் எடுத்து சென்றுள்ளார். அப்போது தேர்தல் பறக்கும் படையினர் நேதாஜியை பிடித்து, ரூ.16.50 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து தேர்தல் அலுவலர் வே.முத்தையன் நேதாஜியை விசாரணை செய்ததில், அதிமுகவை சேர்ந்த சரவணன், என்பவர் வரச் சொன்னதாகவும் அவர் அழைத்ததன் பேரில் ஆசிரியர் குமார் வீட்டிற்கு வந்தேன். இந்த பணம் தேர்தலுக்கான பணம் தான் என ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும் இன்னும் பணம் வீட்டிற்குள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், ஆசிரியர் குமார், வீட்டை டிஎஸ்பி தமிழ்மணி தலைமையிலான  காவல் துறையினர், வீடு முழுவதும் சுற்றி வளைத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் பணத்தை வீசிய கவிதா என்பவர் முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் குப்புசாமி என்பவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.





Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்