திருப்பத்தூர் அருகே 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்_
திருப்பத்தூரை அடுத்த அம்பேத்கர்நகர் எல்.ஐ.சி. காலனியில் முருகன் என்பவரின் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வட்ட வழங்கல் அதிகாரி கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனைச் செய்தனர்._*
அந்த வீட்டில் 117 மூட்டைகளில் 5½ டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல் திருப்பத்தூரை அடுத்த நாகாலம்மன் கோவில் தெருவில் உள்ள மற்றொரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ எடையிலான 11 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு அனுப்பி வைத்தனர்.