விதிமீறல்... கோடிக் கணக்கான வழக்குகள் பதிவு!

 


தேர்தல் விதிமீறல் தொடர்பாக 3.5 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தேர்தல் விதிமீறல் தொடர்பாக 3.5 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் விதிகளை மீறியதாக ஒரேநாளில் திமுக மீது 4 வழக்குகளும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி மீது 3 வழக்குகளும், அதிமுக, அமமுக மற்றும் பாஜக மீது தலா 2 வழக்குகளும், நாம் தமிழர் கட்சி மற்றும் இதர கட்சி மீது தலா 1 வழக்கு என மொத்தம் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேபோல, தேர்தல் விதிகளை மீறுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகின்றது. விருதுநகரில் இரவு 10 மணிக்குமேல் பொதுக்கூட்டம் நடத்தியதாக நாம் தமிழர் கட்சியின் சீமான், ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக நத்தம் விஸ்வநாதன், திருச்சியில் விதியை மீறி பிரச்சாரம் செய்ததாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் என கட்சி பாகுபாடு இன்றி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்கியது தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், எந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக பணம், பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது என்பது முதல் தகவல் அறிக்கையில் இடம் பெறுவதில்லை என்று சொல்லப்படுகின்றது.

இவ்வாறு பல ஆண்டுகளாக  நிலுவையில் இருக்கும், தேர்தல் விதிமீறல் வழக்குகள், அனைத்து கட்சியினர் மீதும் இருப்பதால், எந்த கட்சியினரும் இது தொடர்பான விசாரணைகளை விரைந்து முடிக்க ஊக்குவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இப்படி நிலுவையில் மூன்றரை கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்