காவல்நிலையத்திலேயே காவலர்களுக்கு பணப்பட்டுவாடா” : கண்டுகொள்ளாத தேர்தல் அதிகாரி !
தமிழகத்தில் மார்ச் 6ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த எடப்பாடி அரசு, சொல்லிக்கொள்ளும்படி எந்தவொரு நன்மையும் செய்யாததால், அ.தி.மு.க-வினர் தேர்தல் பிரச்சாரங்களில் பொய்களையும் அவதூறுகளையும் பரப்பி வருகின்றனர்.
மேலும் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் அ.தி.மு.க அரசுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்துள்ளதால் பணத்தைக் கொடுத்து வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து வருகின்றனர். பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட ஆளும்கட்சி அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள காவல்நிலையங்களில் காவலர்கள் பணப்பட்டுவாடா கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள காவல் நிலையங்களில் நேரடியாக ஒவ்வொரு காவலர்களின் விபரங்களுடன் தேர்தலுக்கு கவர் கொடுக்கப்பட்டுது. அதில், கவரில் பணம் வைத்து விநியோகிக் கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அனுப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்தில் இருந்து இரு தேர்தல் அலுவலர் உட்பட காவல் உதவி ஆணையர்களில் நேரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 5 காவல்நிலையங்களில் 50க்கும் மேற்பட்ட கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் கவர் மூலமாக 2000 ரூபாய் இருந்து 10 ஆயிரம் வரை பணம் இருந்துள்ளது. மொத்த 80க்கும் மேற்பட்ட கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் தற்போது வரை தேர்தல் ஆணையம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை புகார் எழுந்துள்ளது. காவல்நிலையத்திலேயே பணம்பட்டுவாடா செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.