இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் பெயர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் கட்சிகளுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், வேட்பாளர்களிடமிருந்து விருப்ப மனு பெறப்பட்டது. இன்று அவர்களிடம் நேர்க்காணல் நடைபெற்ற நிலையில், மூன்று தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் விவரம் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கடையநல்லூர் தொகுதியில் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, வாணியம்பாடி தொகுதியில் எம்.முஹம்மது நயீம் மற்றும் சிதம்பரம் தொகுதியில் ஏ.எஸ். அப்துல் ரஹ்மான் ரப்பானி ஆகியோர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.