இரண்டாம் முறையாக மீண்டும் வெற்றி பெறுவாரா அல்லது தொகுதியின் சென்டிமென்ட் முன்னாள் அமைச்சர் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நயினார் நாகேந்திரனை கரைசேர்க்குமா காத்திருப்போம்
தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்களை அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றிபெற வைக்காத திருநெல்வேலி தொகுதி மக்கள் 59 ஆண்டுகால செண்டிமெண்டை மாற்றுவாரா தி.மு.க வேட்பாளர் ஏ எல் எஸ் லட்சுமணன்.திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி 1952 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது முதலில் இரட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதியாக இருந்த தொகுதி 1962 முதல் ஒற்றை சட்டமன்ற உறுப்பினர் தொகுதியாக மாறியது. இதுவரை 16 சட்டப்பேரவை தேர்தல்களை சந்தித்துள்ளது 15 பொதுத்தேர்தலும் ஒரு இடைத்தேர்தலிலும் தொகுதி மக்கள் வாக்களித்துள்ளனர்.
தொகுதியில் அதிகபட்சமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏழு முறை வெற்றி பெற்றுள்ளது திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் ஆறுமுறை வெற்றிக்கனியை பறித்து உள்ளனர் இந்திய தேசிய காங்கிரஸ் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது.
1962 க்கு பிறகு திராவிட கட்சிகளே இங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். எனினும் ஒரு முறை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக அடுத்த முறை இதே தொகுதியில் போட்டியிட்டால் அவருக்கு வெற்றி வசமாகவில்லை 1957 மற்றும் 62 தேர்தல்களில் மட்டும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜாத்தி குஞ்சிதபாதம் இருமுறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார் அதற்குப் பிறகு 59 ஆண்டுகளாக இவ்வகை வெற்றி அ.தி.மு.க , தி.மு.க என எவருக்கும் சாத்தியமாகவில்லை.
திராவிட முன்னேற்ற கழகத்தின் ஏ.எல்.சுப்பிரமணியன் 1967 முதல் 2006ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தல்களில் ஏழு முறை திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு உள்ளார் மூன்று முறை அவர் வெற்றி பெற்றுள்ளார்1984, 1986 இல் நடைபெற்ற இடைத்தேர்தல் 1989 பொதுத்தேர்தல 1991 ல் நடைபெற்ற பொதுத்தேர்தல் என தொடர்ந்து நான்கு தேர்தல்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அவர் சந்தித்த போதிலும் 1989 மற்றும் 1996 இல் நடைபெற்ற தேர்தல்களில் மட்டுமே வெற்றி வாகை சூடினார்.
அடுத்தடுத்த தேர்தல்களில் அவரால் வெற்றிபெற முடியவில்லை2001 ஆம் ஆண்டு முதல் திருநெல்வேலி தொகுதியில் நடைபெற்று வரும் நான்கு தேர்தலிலும் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் இரு முறை வெற்றி பெற்று இரு முறை வெற்றி வாய்ப்பை இழந்தார்.
2001 மற்றும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற அவர் 2006 மற்றும் 2016 இல் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை தற்போது இவர் ஐந்தாம் முறையாக களம் காண்கின்றார். இம்முறை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சி சார்பில் நெல்லை தொகுதியில் போட்டியிடுகிறார்.
2011 ஆம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஏ எல் எஸ் லட்சுமணன் தற்போது நடைபெற உள்ள 2021ஆம் ஆண்டு தேர்தலில் மூன்றாம் முறையாக களம் காண்கின்றார் 2011ஆம் ஆண்டு நயினார் நாகேந்திரனிடம் வெற்றி வாய்ப்பை இழந்த லட்சுமணன் அதே வேட்பாளரை 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 701 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டார்.
ஏ.எல்.எஸ். லட்சுமணன் தற்போது திருநெல்வேலி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் தற்போது நடைபெற உள்ள தேர்தலில் 59 ஆண்டுகால வரலாற்றை முறியடித்து இந்திய தேசிய காங்கிரசின் ராஜாத்தி குஞ்சிதபாதம் போன்று தொடர்ந்து இரண்டாம் முறையாக மீண்டும் வெற்றி பெறுவாரா அல்லது தொகுதியின் சென்டிமென்ட் முன்னாள் அமைச்சர் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நயினார் நாகேந்திரனை கரைசேர்க்குமா காத்திருப்போம்.
ஏ.எல்.எஸ். லட்சுமணன் தற்போது திருநெல்வேலி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் தற்போது நடைபெற உள்ள தேர்தலில் 59 ஆண்டுகால வரலாற்றை முறியடித்து இந்திய தேசிய காங்கிரசின் ராஜாத்தி குஞ்சிதபாதம் போன்று தொடர்ந்து இரண்டாம் முறையாக மீண்டும் வெற்றி பெறுவாரா அல்லது தொகுதியின் சென்டிமென்ட் முன்னாள் அமைச்சர் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் நயினார் நாகேந்திரனை கரைசேர்க்குமா காத்திருப்போம்.