சிபிசிஐடி போலீசாரும் இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் குறித்து விசாரணை செய்ய தமிழக அரசால் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி விசாரணையை துவக்கியுள்ளது.

பெண் எஸ்பி சிறப்பு டிஜிபி மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகார் மீது விசாரணை நடத்த கடந்த மாதம் 24-ம் தேதி தமிழக அரசின் விசாகா கமிட்டியை அமைத்தது. 

கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெய ஸ்ரீ ரங்கநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதில் ஐஜி அருண் நீண்ட விடுப்பில் சென்ற காரணத்தினால் அவரை மாற்றி நிர்மல் குமார் ஜோஷி என்ற ஐபிஎஸ் அதிகாரியை குழுவில் நியமித்தனர்.


இதனிடையே சிபிசிஐடி போலீசாரும் இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விசாகா கமிட்டி பெண் எஸ்பி கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக விசாரணையை துவக்கியுள்ளது. 

தற்போது முதற்கட்ட விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக புகார் அளித்த பெண் எஸ்பியிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

அடுத்த கட்டமாக பெண் எஸ்பியை புகார் அளிக்க விடாமல் தடுத்த அதிகாரிகளையும் மற்றும் முக்கியமாக குற்றம் சாட்ட சிறப்பு டிஜிபியும் விரிவாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.


முன்னதாக சிறப்பு டிஜிபி யை சஸ்பெண்ட் செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெண்கள் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அதுமட்டுமல்லாது பத்துக்கும் மேற்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது வரை வழக்கு பதிவு செய்யப்பட்ட மாவட்ட எஸ் பி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்