தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவின் காரை சோதனையிட்ட தேர்தல் அதிகாரி பணியிடமாற்றம்..!!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போது பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது கோவில்பட்டி தொகுதி.
இங்கு போட்டியிடும், தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு எதிராக களமிறங்கியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
இந்தப் போட்டியால் சதா டென்ஷனாகவே இருக்கும் கடம்பூர் ராஜு, தேர்தல் அதிகாரிகளின் மீது கோபத்தி வெளிபடுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 12ஆம் தேதி தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி விலக்கு அருகே தேர்தல் பணியாற்றும் பறக்கும்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் ஆளும்கட்சியினர் கார்களை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அமைச்சர் கடம்பூர் ராஜு, ஒரு அமைச்சரின் காரையே நிறுத்துவீர்களான என அதிகாரிகளிடம் எகிறியுள்ளாராம்.
அதோடு மட்டுமல்லாமல் இன்னும் பத்து நாளைக்குத்தான் நீ ஆடுவ.. அதுக்குப்பிறகு உன்னை என்ன பண்ணுறேன் பாரு..’என்று பறக்கும்படை குழுத் தலைவரை மிரட்டியிருக்கிறார்.
அதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து தொடர்ந்து ஒருமையில் பேசியதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
நேர்மையாக பணியாற்றினால் இது தான் கதியா என அதிகாரிகள் வேதனை அடைந்தனர்.
மேலும் அமைச்சரின் அவதூறு பேச்சால் மனஉளைச்சலுக்கு ஆளான அந்தப் பறக்கும்படை குழுத் தலைவர், நாலாட்டின் புதூர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
இதனிடையே, அமைச்சர் மற்றும் அவருடன் சென்ற அதிமுகவினர் காரை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த தேர்தல் அதிகாரி மாரிமுத்து விளாத்திகுளம் தொகுதிக்குக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அமைச்சரின் காரை திட்டமிட்டு சோதனை நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரி தனது கடமையை செய்ததற்காக அவர் மீது நடவடிக்கையா என சக அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்தனர்