சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். தங்கத்தைக் கடத்திய குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 


துபாயிலிருந்து வரும் விமானம் ஒன்றில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்படுவதாக உளவுத்துறையினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. 

அப்போது இண்டிகோ விமானத்தில் ஓர் இருக்கையின்கீழ் உயிர்க்கவச ஆடை வைத்திருக்கும் பையின் உள்ளே சோப்புப் பெட்டி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்த அதிகாரிகள், சந்தேகப்பட்டு பெட்டியைத் திறந்து பார்த்துள்ளனர். 

அதில் கருப்புநிற டேப்பால் சுற்றப்பட்ட 821 கிராம் தங்கப்பசை அடங்கிய 3 பொட்டலங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அதிலிருந்து ரூ.35.7 லட்சம் மதிப்பிலான 730 கிராம் தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.


சோதனை நடந்துகொண்டிருந்தபோது அவசரமாக வெளியேறிய ஓர் பயணியை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்ததில் அவர் மதுரையைச் சேர்ந்த யாசர் அபராத்(22) என்றும், அவர்தான் தங்கம் வைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து பயணம் செய்ததும் தெரியவந்தது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்