திமுக - அதிமுகவினர் மோதல் : 10 க்கும் மேற்பட்டோர் காயம்
நள்ளிரவில் கரூரில் திமுக மற்றும் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் இரு தரப்பிலும் 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனவர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரூரில் நள்ளிரவில் திமுக மற்றும் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் இரு தரப்பிலும் 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனவர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. இந்த நிலையில் கரூர் தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜியும், அதிமுக சார்பில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் கரூர் மேற்கு நகர திமுக துணைச் செயலாளர் கார்த்திகேயன் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதிமுக தெற்கு நகர செயலாளர் ஏகாம்பரம் மற்றும் அவருடன் வந்த சிலர் கார்த்திகேயனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினருக்கும் அடிதடி ஏற்பட்டுள்ளது. இதில் கார்த்திகேயனின் கார் கண்ணாடியை ஏகாம்பரம் உடைத்துள்ளார்.
இந்த நிலையில், வீடு திரும்பிய கார்த்திகேயனை பின்தொடர்ந்து வந்த ஏகாம்பரம் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் கார்த்தியின் வீட்டு மீது கற்களை எறிந்து, வீடு புகுந்து தாக்கி உள்ளனர். இதில் கார்த்திகேயன், கேசவன், உதயமூர்த்தி, சாந்தகுமார், சின்னப்பன் ஆகிய 5 பேர் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.