ஒரு நாள் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 9 ஆயிரத்தை கடந்தது.. 39 பேர் உயிரிழப்பு

 


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,344 பேருக்கு புதிதாக கொரேனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் 5,263 பேர் கொரேனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 9,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,80,728.ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 2,884 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 6,460 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 2,80,184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை அடுத்து செங்கல்பட்டில் 807 பேரும், கோவையில் 652 பேரும், திருவள்ளூரில் 389 பேருக்கும் கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று குணமடைந்து இன்று மட்டும் 5,263 பேர் வீடு திரும்பி உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,02,022. உள்ளது. தமிழகத்தில் கொரோனாவிற்கு தற்போது 58,097 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா சிகிச்சை பலனின்றி இன்று 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,071 ஆக அதிகரித்துள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்