பாபநாசம் தொகுதி வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்கு கொரோனா பாதிப்பு
பாபநாசம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும், மமக தலைவருமான ஜவாஹிருல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் வருகிற 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பரப்புரைகளில் ஈடுபடும் வேட்பாளர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் பாபநாசம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும், மமக தலைவருமான ஜவாஹிருல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதியான நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.