கொரோனாவால் உற்றாரைப் பறிகொடுத்தவர்களின் இழப்பை பாண்டேவின் கருத்தால் எழுந்துள்ள சர்ச்சை!
கொரோனா தொற்று பரவலால் நாடு முழுவதும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியபோது, கொரோனா உயிரிழப்புகளை சாலை விபத்துகளுடன் ஒப்பிட்டுப் பேசினார் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே.
உலகையே அச்சுறுத்தி வரும் கண்ணுக்கு தெரியாத எதிரியை எவ்வாறு ஒரு சாலை விபத்து மரணங்களுக்கு நிகராக ஒரு ஊடகவியலாளரால் ஒப்பிட முடிந்தது எனக் கடும் கண்டனங்கள் எழுந்தன.
கொரோனா தொற்றால் இந்தியாவில் மட்டுமே உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. நாள்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருந்துகள், ஆக்சிஜன், வெண்ட்டிலேட்டர் வசதி கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.
இப்போதும் கூட கொரோனாவின் தாக்கத்தையும், உயிரின் மதிப்பையும் உணராமல் கொரோனா உயிரிழப்புகளை இயல்பாக்கும் விதமாகப் பேசிவருகிறார் ரங்கராஜ் பாண்டே.
சமீபத்தில் கொரோனா பற்றிப் பேசிய ரங்கராஜ், “வெவ்வேறு காரணங்களால் நாள்தோறும் இந்தியாவில் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறக்கிறார்கள். கொரோனாவால் அதிகபட்சமாக ஒரே நாளில் 2,300 மக்கள் மட்டுமே இறக்கிறார்கள். நாம் பீதியடைய வேண்டியதில்லை” எனப் பேசியிருகிறார்.
கொரோனா இறப்பைத் தடுக்க இயலாத பா.ஜ.க அரசைக் காப்பாற்றும் விதமாகவும், கொரோனாவால் உற்றாரைப் பறிகொடுத்தவர்களின் இழப்பை அவமதிக்கும் விதமாகவும் உள்ள ரங்கராஜின் கருத்து கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.