பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர் கைது
சென்னை : சென்னை ஆவடி அருகே சர்ச்சில் ஜெபம் செய்த பெண்ணை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி அருகே மோரை நியூ காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்காட் டேவிட் 53; மத போதகர். அதே பகுதியில் உள்ள சர்ச்சில் ஜெபம் நடத்தி மதபோதனை செய்து வந்தார். தீராத குடும்ப பிரச்னைகளை தீர்க்க வீடுகளுக்கு சென்று அங்கு ஜெபம் செய்வார்.அதுபோல ஆரிக்கமேடு பகுதியில் வசிக்கும் ஏஞ்சலின் 42 என்பவர் வீட்டிற்கு ஜெபம் செய்ய சென்றுள்ளார். அப்போது அவர் ஏஞ்சலினை சர்ச்சிற்கு வந்து ஜெபம் செய்யுமாறு அழைத்துள்ளார்.
இதன்படி 17ம் தேதி சர்ச்சில் ஏஞ்சலின் ஜெபம் செய்து கொண்டிருந்தார். அப்போது சபலக்கார மதபோதகர் ஸ்காட் டேவிட் ஏஞ்சலினை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த ஏஞ்சலின் அங்கிருந்து தப்பி ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து மதபோதகரை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.