நல்லக்கண்ணு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
கொரோனா தொற்றால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு குணமடைந்து வீடு திரும்பினார்.
கொரோனா தொற்றால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு 95 வயது. இவர் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் மற்றும் சளியால் அவதிப்பட்டு வந்ததார். இதனைத் தொடர்ந்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அத்துடன், அவரின் மகள், பேரன், பேரனின் மனைவி ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 3 பேரும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.