சைதை துரைசாமிக்கு மா.சுப்பிரமணியன் சவால்!
அ.தி.மு.க வேட்பாளர் சைதை துரைசாமி என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என சட்டமன்ற உறுப்பினரும், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலை தலைமை தேர்தல் பணிமனையில் சைதாப்பேட்டை தொகுதியின் தி.மு.க வேட்பாளர் மா. சுப்பிரமணியன். பத்திரிகையாளர் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், என்னுடைய நண்பர் ஜம்புலிங்கம் 2 லட்சம் ரூபாய்க்கு தனக்கு வீடு வாங்கி தந்தார் என்றும், 1996 முதல் அந்த வீட்டில் நான் குடியிருக்கிறேன்.
மேயர் தேர்தலில் நான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளேன், நான் தங்கியிருக்கும் வீட்டு மேற்கூரை மட்டுமே எனக்கு சொந்தம், இடம் சிட்கோவுக்கு சொந்தம் என அதில் நான் குறிப்பிட்டுள்ளேன்.