உணவு பொருட்கள் வழங்கி உதவி செய்த விகேபுரம் காவல்துறையினர்
வி.கே. புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சுற்று வட்டார பகுதிகளில் வசித்து வரும் சுமார் 50 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ்,அவர்கள் வி.கே.புரம் காவல் ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவலர்கள் சார்பாக கொரோனா ஊரடங்கு கால நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் இன்று (23.05.2021) காலை வி.கே.புரம் காவல் நிலையத்தில் வைத்து அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்ஸிஸ் அவர்கள் மற்றும் வி.கே.புரம் காவல் ஆய்வாளர் சண்முகம் அவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு 15 நாட்களுக்கு தேவையான அரிசிப்பை, காய்கறி தொகுப்பு, மளிகை பொருட்களை வழங்கினார்கள்.
அப்போது அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் தற்போது கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதற்காக ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு, நெறிமுறைகளையும் அறிவித்துள்ளது. அதை பின்பற்ற வேண்டியது நமது கடமை. ஆகவே நாம் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசத்தை உரிய முறையில் மூக்கு, வாய் ஆகியவற்ற முற்றிலுமாக மறைத்து முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரகுடிநீர் எடுத்துகொள்ள வேண்டும், மேலும் கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டு கொள்வதன் மூலம் நம் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.