தமிழில் பதவிப் பிரமாணம்; கேரள எம்.எல்.ஏ அசத்தல்!
கேரள சட்டப் பேரவைத் தோதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அபார வெற்றிபெற்றது.
இதையடுத்து கடந்த 20ம் தேதி புதிய அரசு பொறுப்பேற்றது. கேரள மாநில முதலமைச்சராக இரண்டாவது பினராயி விஜயன் பதவியேற்று கொண்டார். அவருடன் 20 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது.
இதையடுத்து சட்டசபையை நடத்துவதற்கு இடைக்கால சபாநாயகராக பிடிஏ ரகீம் கடந்த வெள்ளிக் கிழமை ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், 15-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று எம்எல்ஏக்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு இடைக்கால சபாநாயகர் ரகீம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அப்போது கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஏ.ராஜா தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.