மாற்றுதிறனாளிகளுக்கு நிவாரன பொருட்களை ஏ.எஸ்.பி வழங்கினார்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வள்ளியூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா இ.கா.ப இன்று வழங்கினார்
மேலும் வள்ளியூர் உதவி காவல் கண்காணிப்பாளர் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கியும் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டுமெனவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றி நடந்து கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.