போலீஸ்..! 10 பேர் மீது சிபிசிஐடி வழக்கு..!

 


சினிமாவில் தான் போலீஸ் தாதாக்கள் மிரட்டிப் பணம் பறிப்பதையும், சொத்துக்களை எழுதி வாங்கும் ரவுடியிஸம் செய்வதையும் பார்த்திருப்போம்.

நிஜ சம்பவமே இருக்கு என்பதுபோல் நடந்து கொண்டிருக்கின்றனர் சென்னை காவல்துறையைச் சேர்ந்த சிலர்.

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜேஷ். நல்ல வருமானம், செல்வாக்கு என்று இருந்துள்ளார். இவரை குறிவைத்து தொழில் போட்டியாளர்கள் சிலர் அண்ணாநகர் காவல்துறையைச் சேர்ந்த சில காவலர்களுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டினர். கடந்த 2019ம் ஆண்டு அவரையும், அவரது குடும்பத்தாரையும் செங்குன்றம் அருகேயுள்ள அவருடைய பண்ணை வீட்டிலேயே சிறைபிடித்துள்ளனர். தொழிலதிபரை கட்டிவைத்து மிரட்டி அவரிடம் சில சொத்துக்களை எழுதி வாங்கியிருக்கின்றனர். பெண் என்று பாராமல் கூட அவரது தாயைக் கூட மிரட்டித் தாக்கியுள்ளனர். 

குடும்பத்தினர் கண் முன்னரே துன்புறுத்தப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ராஜேஷ் போலீஸ் தலைமையிலான மிரட்டல் கும்பல் நீட்டிய பத்திரங்களில் எல்லாம் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு குடும்பத்துடன் வீடு திரும்பினார்.

வழக்கு பதியவே ஓராண்டு:

ராஜேஷ், உயிர்பிழைத்து தப்பியிருந்தாலும். அவருக்கு இழைக்கப்பட்ட துரோகமும் அநீதியும் அவரை நிம்மதி இழக்கச் செய்தது. இதனால், கடந்த 2019-ஆம் ஆண்டு ராஜேஷ் புகார் அளித்தார். காவல்துறையினர் மீதே புகார் என்பதால் அந்தப் புகார் ஏற்றுக்கொள்ளப்படவே ஓராண்டானது. இதனால், 2020 ஆம் ஆண்டுதான் வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர், வழக்கு டிஜிபி உத்தரவின் பேரில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இது தொடர்பாக ஊரடங்குக்கு மத்தியிலும் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனர். திருமங்கலம் காவல்நிலையத்தைச் சேர்ந்த 6 போலீஸ் அதிகாரிகள் தொழிலதிபர்கள் வெங்கடேஷ், ஸ்ரீநிவாச ராவ் உட்பட 10 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். 

திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், எஸ்.ஐ பாண்டியராஜன் ஆகிய அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் வந்தது போலீஸேவா! என்று மக்களை ஆச்சர்யப்பட வைத்தது. இந்த 10 பேர் மீதும் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஏற்கெனவே இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுவிட்டார். இந்நிலையில், தற்போது 10 பேர் மீதும் ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிபிசிஐடி விசாரணை வேகமெடுத்துள்ளதோடு வழக்கு ஊடக வெளிச்சத்துக்கு வந்துவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட ராஜேஷ் குடும்பத்தினர் தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்துக்கு விரைவில் நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்