தமிழகத்திலுள்ள ஐ.பி.எஸ்.அதிகாரிகள் 49 பேர் மாற்றப்பட்டனர்.
அதன்படி 5 பேர் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றனர். சேலம், நெல்லை, திருப்பூருக்கு புதிய போலீஸ் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய கமிஷனர்கள்
சேலம், நெல்லை, திருப்பூருக்கு புதிய போலீஸ் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை நகர போலீசிலும் உயர் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 5 டி.ஐ.ஜி.கள் போலீஸ் ஐ.ஜிக்களாக பதவி உயர்வு பெற்று உள்ளனர். அதுபோல சூப்பிரண்டுகளாக இருந்த சிலர் டி.ஐ.ஜி.க்களாக பதவி ஏற்கிறார்கள்.
மாற்றப்பட்ட அதிகாரிகளின் பெயர் மற்றும் அவர்களது பதவி மாற்றம் விவரம் வருமாறு:-
ஐ.ஜி.க்கள் மாற்றம்
* சுமித்சரண்- நலத்துறை ஐ.ஜி.யான இவர், ரெயில்வே போலீஸ் ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.
* வனிதா- ரெயில்வே ஐ.ஜி.யான இவர், திருப்பூர் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
* செந்தாமரைக்கண்ணன்- செயலாக்கப் பிரிவு ஐ.ஜி.யான இவர், நெல்லை போலீஸ் கமிஷனராக பதவி ஏற்பார்.
* முருகன்- நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யான இவர், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.
* தமிழ்சந்திரன்- ஆயுதப்படை ஐ.ஜி.யான இவர், நிர்வாகப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
* நஜ்முல் ஹோடா- தமிழ்நாடு காகித ஆலை தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக பணியில் இருந்த இவர், சேலம் போலீஸ் கமிஷனராக பதவி ஏற்பார்.
* சந்தோஷ்குமார்- சேலம் போலீஸ் கமிஷனர் பொறுப்பில் இருந்த இவர், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.
* தேன்மொழி- சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாக பதவி வகித்த இவர், சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
* கார்த்திகேயன்- திருப்பூர் போலீஸ் கமிஷனராக பதவியில் இருந்த இவர், சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.
* ஜோஷி நிர்மல் குமார்- தலைமையக ஐ.ஜி.யாக பதவி வகிக்கும் இவர், சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.
டி.ஐ.ஜி.க்கள் பதவி உயர்வு
* அமீத்குமார் சிங்- இந்திய வெளியுறவுத்துறையில் இயக்குனராக டி.ஐ.ஜி. அந்தஸ்தில் பணியில் இருந்த இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறையில் பணிபுரிவார்.
* அஸ்வின் எம் கோட்னீஸ்- மத்திய அமைச்சரவை செயலகத்தில் இயக்குனராக டி.ஐ.ஜி. அந்தஸ்தில் பணியில் இருந்த இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தொடர்ந்து மத்திய அமைச்சரவை செயலகத்தில் பணியாற்றுவார்.
* பாலகிருஷ்ணன்- சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனராக டி.ஐ.ஜி. அந்தஸ்தில் பணியாற்றிய இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். திருச்சியை தலைமையிடமாக கொண்ட மத்திய மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.
* பிரதீப்குமார்- சேலம் சரக டி.ஐ.ஜி.யாக பணியில் இருந்த இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக பதவி ஏற்பார்.
* சுதாகர்- மதுரை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர், ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். கோவையை தலைமையிடமாக கொண்ட மேற்கு மண்டல ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
* சஞ்சய்குமார்- தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.யான இவர், நவீனமயமாக்கல் ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.
டி.ஐ.ஜி.க்கள் மாற்றம்
* ஏ.ஜி.பாபு- நிர்வாகப் பிரிவு டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர், வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* பிரவீன்குமார் அபிநபு- நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த இவர், லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, தொடர்ந்து நெல்லை சரக டி.ஐ.ஜி.யாகவே நீடிப்பார்.
* எழில் அரசன்- சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக பணியாற்றிய இவர், ஆயுதப்படை டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.
* மகேஸ்வரி- தலைமையக டி.ஐ.ஜி.யாக இருந்த இவர், சேலம் சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.
* ராதிகா- லஞ்ச ஒழிப்பு டி.ஐ.ஜி.யாக பணியில் இருந்த இவர், திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.
* விஜயகுமாரி- கடலோர பாதுகாப்பு குழும டி.ஐ.ஜி.யாக பதவி வகித்த இவர், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.
* காமினி- வேலூர் சரக டி.ஐ.ஜி.யான இவர், மதுரை சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* ரூபேஸ்குமார் மீனா- தஞ்சை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.
* ஆனி விஜயா- திருச்சி சரக டி.ஐ.ஜி.யான இவர், நிர்வாகப் பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சத்யபிரியா- போலீஸ் பயிற்சி பிரிவு டி.ஐ.ஜி.யாக இருந்த இவர், காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.
* மல்லிகா- சென்னை தலைமையக இணை கமிஷனராக பணியாற்றும் இவர், தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.
* சாமுண்டீஸ்வரி- காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யான இவர், சென்னை தலைமையக இணை கமிஷனராக மாற்றப்பட்டார்.
* முத்துசாமி- திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யான இவர், கோவை சரக டி.ஐ.ஜி.யாக பதவி ஏற்பார்.
சூப்பிரண்டுகள் பதவி உயர்வு
* சரவணன்- சென்னை சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று தொடர்ந்து சி.பி.ஐ.யில் பணிபுரிவார்.
* சேவியர் தனராஜ்- மத்திய உளவுப்பிரிவு (ஐ.பி.) சூப்பிரண்டாக பணியில் இருந்த இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தொடர்ந்து மத்திய உளவுப்பிரிவில் பணியாற்றுவார்.
* பர்வேஸ்குமார்- தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றார். தஞ்சை சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டார்.
* அனில்குமார் கிரி- மத்திய அமைச்சரவை செயலகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து அமைச்சரவை செயலகத்தில் பணியாற்றுவார்.
* பிரபாகரன்- சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவு சூப்பிரண்டாக உள்ள இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றார். சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் எஸ்டாபிளிஸ்மென்ட் பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
* கயல்விழி- திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி.யாக பொறுப்பு ஏற்பார்.
* சின்னச்சாமி- நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும சூப்பிரண்டான இவர், டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை கடலோர பாதுகாப்பு குழும டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
இணை கமிஷனர் ராஜேந்திரன்
* ராஜேந்திரன்- தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யான இவர், சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
* நரேந்திரன் நாயர்- கோவை சரக டி.ஐ.ஜி.யான இவர், சென்னை தெற்கு இணை கமிஷனராக பதவி ஏற்பார்.
* லலிதா லட்சுமி- சமூக நீதி மற்றும் மனித உரிமை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர், சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
* திஷா மிட்டல்- திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
* சிவபிரசாத்- மதுரை சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக பதவி வகித்த இவர், சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* கார்த்திகேயன்- ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியில் இருந்த இவர், சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.
* பிரதீப்- சேரன்மகாதேவி உதவி போலீஸ் சூப்பிரண்டான இவர், சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
* குமார்- சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டான இவர், சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு சூப்பிரண்டு மாற்றம்
* சுந்தரவதனம்- செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர், சென்னை மாதவரம் துணை கமிஷனராக பதவி ஏற்பார்.
* தீபா கனிகர்- சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியில் உள்ள இவர், சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.
* ராமர்- சென்னை சொத்துரிமை புலனாய்வு பிரிவு சூப்பிரண்டான இவர், நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனராக பதவி ஏற்பார்.
* பாலாஜி சரவணன்- புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியில் உள்ள இவர், சென்னை தலைமையக துணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
* மகேந்திரன்- சென்னை ஆவடி சிறப்பு காவல்படை கமாண்டராக பணியாற்றும் இவர், சென்னை நிர்வாக பிரிவு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளதாக தமிழகஅரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.