மின்சார வாரிய தொமுச மற்றும் அன்னம் புஷ்பம் அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மக்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
ஊரடங்கு ஆரம்பித்த நாளிலிருந்து இடைவிடாமல் மின்சார வாரிய தொமுச சார்பில் செயலாளர் ஈ.பி. அ.சரவணன் தொடர்ந்து மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.
இன்று மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலுள்ள அன்னம் புஷ்பம் அறக்கட்டளை சார்பில் திருப்பூா் மாவட்டம் பெருமாநல்லூர் வடக்கு பகுதிகளான
ஈட்டிவீராம்பாளையம், லட்சுமி கார்டன், ஏ டி காலணி , பெருமாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள 500 க்கும் மேற்பட்ட மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவுக்கு சிரமப்பட்டு வரும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றது இந்நிலையில் இன்று புதினா சாதம், தயிர் சாதம் 500க்கும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் ஈ.பி. அ. சரவணன் ஏற்பட்டில் கடந்த மாதம் ஊரடங்கு ஆரம்பித்த நாள் முதல் தொடர்ந்து திருப்பூர் பகுதியிகளில் உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக அவர் கூறுகையில் திருப்பூர் பகுதிகளிலுள்ள தொழிலாளர்கள் ஊரடங்கு காரணமாக உணவு கிடைக்காமல் சிரமப்பட்டு வருவதை அடுத்து கடந்த 48 நாட்களாக தொடர்ந்து
தூய்மை பணியாளர்கள் மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர்கள், மின்சார வாரிய ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், பொது மக்கள் என தினசரி 500 பேர் வீதம் தற்போது வரை சுமார் 25 ஆயிரம் நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டு உள்ளது மேலும் பொது மக்களுக்கு பசியாற உணவு அளிப்பது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இதில் அன்னம் புஷ்பம் நிறுவனர் .ஓ.கே. சண்முகம், நிர்வாகிகள் பிரவீஷ் (எ) பாலாஜி ராஜா, மின்சார வாரிய தொமுச செயலாளர் ஈ.பி.அ.சரவணன் , சின்னதுரை, நாகராஜ், ஏ. வி. எஸ். நந்தகுமார் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர், திருமூர்த்தி ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர், அருண் ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர், வள்ளிபுரம் ராஜீவ் , கிளைக் கழகச் செயலாளர்கள் அனந்தராமன், பழனிச்சாமி, செந்தில்குமார், மணி கழக நிர்வாகிகள் மணிவேல் ,செல்வி ,அமுதா, ஜெயராஜ் பொன் கொடி, லட்சுமணன், விவசாய தொழிலாளர் அணி ஒன்றிய அமைப்பாளர் செல்வமணி உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி திருப்பூா் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம். எல்.ஏ அவர்களின் ஆலோசனையின் பேரிலும் தொமுச பேரவை மாநில துணை செயலாளர் டி.கே.டி. மு. நாகராசன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் திருப்பூரில் மின்சார வாரிய தொமுச சார்பில் செயலாளர் அ.சரவணன் தொடர்ந்து பொது மக்களுக்கு உணவு உள்ளிட்ட பல்வேறு நிவாரண பணிகளை திருப்பூரில் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.