ராணிப்பேட்டை எல்ஐசி முத்துக்கடை அலுவலகதிற்கு முன்பு எல்ஐசி லிகாய் சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உணவு நேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 


ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை முத்துக்கடை யிலுள்ள எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பு எல்ஐசி  லிகாய் சங்கத்தினர் தலைவர் ஜெயகுமார் தலைமையில்  மதிய  உணவு நேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர் எல்ஐசியின் பங்குகளை பங்கு சந்தையில் பட்டியலிடும் ஐபிஓ  முடிவை திரும்பப் பெறு ,நேரடி பாலிசி விற்பனையை கைவிடு,

 பொதுத் துறைகளை தனியார்மயமாக்கும் முயற்சிகளை கைவிட்டு, நிவாரண நிதியாக  முன்பணம் ஒரு லட்சம் வழங்கிடு,சென்ற ஆண்டு கொடுத்த முன் பணத்தொகை நிவாரணமாக மாற்றிடு,  அனைத்து முகவர்களுக்கும் வழங்கிடு,கோவிட் 19 தொற்றினால் உயிரிழந்த முகவர் குடும்பங்களுக்கு 25 லட்சம் நிவாரணம் வழங்கு, அனைத்து கிளைகளிலும் ஒரே மாதிரியான சேவைகளை வழங்கிடு,போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்

 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வி.எஸ். தியாகராஜன், மணிமாறன், சீனிவாசன், முருகானந்தம், கன்னியப்பன், சபரிநாதன், போன்றோர் முன்னிலை வகித்தனர்மேலும் முன்னணி பொறுப்பாளர்கள் ரவிக்குமார் ,செல்வம், ஏழுமலை,

 வினோத்குமார், யோகானந்தம், பாலசுந்தரம் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் வேலூர் கோட்டம் பொதுச் செயலாளர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியின் இறுதியில் மோகனரங்கன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார் .

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்