கொடைக்கானலில் அமைய இருக்கும் ஹெலிகாப்டர் தலத்திற்கு-மாவட்ட ஆட்சியர் விசாகன் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு
கொடைக்கானலில் அமைய இருக்கும் ஹெலிகாப்டர் தலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாவட்ட ஆட்சியர் விசாகன் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் விதமாக ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்க பல நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் சின்னபள்ளம் என்னும் பகுதியில் அரசு நிலத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு தேர்வு செய்யப்பட்ட பகுதியை ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர். ஹெலிகாப்டர் இறங்கு தளம் குறித்து அரசுக்கு அறிக்கை தெரிவித்த பிறகே இறுதி செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் பள்ளங்கி பகுதியில் அமைந்துள்ள குளிர் பதன கிடங்கையும் பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்-செய்தியாளர் கொடைக்கானல் தேவா.