திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி பந்தக்கால் நடும் விழா
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் துவங்குவதை முன்னிட்டு கோவிலில் இன்று தருமபுர ஆதினம் 27-வது மடாதிபதி குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சாமிகள் முன்னிலையில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து உலக மக்கள் நன்மைக்காக கொரோனா நோய் தொற்றிலிருந்து முழுவதும் விடுபடுவதற்காக திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சன்னதியில் அஸ்திர யாக பூஜை செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அமிர்தகடேஸ்வரர் சாமி அபிராமி அம்பாள் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைப்பெற்றது.நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம்.