வி.ஜே.அர்ச்சனா... உடல் மெலிந்து குரலும் இப்படி ஆகிவிட்டதே.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!
வி.ஜே.அர்ச்சனாவுக்கு மூளையில் மேஜர் ஆபரேஷன் முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீல் சேரில் வீடு திரும்பியிருக்கும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டாரே என ரசிகர்கள் மன வருத்தம் அடைந்துள்ளனர்.
சன் டிவியில் ஒளிபரப்பான ‘காமெடி டைம்’ நிகழ்ச்சியின் மூலம் உலகறிந்த தொகுப்பாளியாக மாறியவர் அர்ச்சனா. பல சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும், ஒரு சில படங்களிலும் நடித்த அர்ச்சனா, விஜய் டிவியில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
BiggBoss சீசன் -4-ல் பங்கேற்ற VJ Archanaவுக்கு ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு தந்தனர்.
இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் வி.ஜே.அர்ச்சனாவுக்கு மூளையில் ஆபரேஷன் செய்யப்பட்டது. மிகவும் சிக்கலான ஆபரேஷனுக்கு பின்னர் மருத்துவமனையில் தங்கி ஓய்வில் இருந்து வந்த அர்ச்சனா தற்போது டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியிருக்கிறார்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதை தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் அர்ச்சனா.
மருத்துவமனையில் இருந்து வீல் சேரில் வீடு திரும்பியிருக்கிறார். அந்த வீடியோவில் தனது வழக்கமான கணீர் குரலுக்கு பதிலாக மெல்லிய குரலில் மிகவும் கஷ்டப்பட்டு அவர் பேசியிருக்கிறார். தான் அனுபவித்த வேதனைகளை அவர் எடுத்துரைத்திருக்கிறார். இதனைக் கண்ட ரசிகர்கள் வி.ஜே.அர்ச்சனாவுக்கா இந்த நிலை என வருத்தமடைந்துள்ளனர்.
முன்னதாக அர்ச்சனாவின் ஹெல்த் அப்டேட்டை அவரின் மகள் ஸாரா வெளியிட்டிருந்தார். அதில் அர்ச்சனாவின் கையை பிடித்திருக்கும் ஃபோட்டோவை வெளியிட்ட ஸாரா, “அச்சும்மா திரும்பி வந்து விட்டார். விரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்போம். நாளை என்பது இருக்கிறதா எனத் தெரியவில்லை, அதனால் வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.