நடராஜனுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த யோகி பாபு... வைரலாகும் புகைப்படங்கள்
நடிகர் யோகி பாபு உடன் இருக்கும் புகைப்படத்தை கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடராஜனுக்கு ஆஸ்திரேலிய தொடரில் இடம் கிடைத்தது.
ஆஸ்திரேலியாவின் 3 விதமான தொடர்களிலும் நடராஜன் சிறப்பாக விளையாடினார். அதன்பின் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று கொண்ட அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் யோகி பாபுவும் நடராஜனும் உணவகம் ஒன்றில் சந்தித்து கொண்ட புகைப்படங்களை நடராஜன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
நடராஜன் தனது ட்விட்டரில், நினைவில் வைத்து கொள்ள வேண்டிய முக்கியமான நாள். எப்போதும் அன்பாகவும் கலகலப்பாகவும் இருக்கக்கூடியவரான நண்பர், யோகிபாபுவை சந்தித்ததில் மகிழ்ச்சியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நடராஜனுக்கு யோகி பாபு முருகன் சிலை ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார். யோகி பாபு தீவிர முருகன் பக்தர் ஆவார்.