தி மு க அரசை கண்டித்து அஇஅதிமுக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :
தேனி பெரிய குளத்தில் தேனி தொகுதிபாராளுமன்ற உறுப்பினரும், மத்திய நீர்வள நிலைக்குழு உறுப்பினரும் அஇஅதிமுக மக்களவை தலைவருமான ப.ரவீந்திரநாத் அவர்கள் அலுவலகம் எதிரே, தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ப.ரவீந்திரநாத் தலைமையில், பெரியகுளம் நகர செயலாளர் ராதா முன்னிலையில் , தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி மு க அரசை கண்டித்து உரிமைக் குரல் முழக்கப் போராட்டம் மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பட்டம் நடைபெற்றது.
இந்த கவனஈர்ப்பு ஆட்பாட்டத்தில் நீட் தேர்வு ரத்து, விலைவாசி உயர்வு,பெட்ரோல் டீசல் விலை உயர்வு, மேகதா து அணை கட்டுவதற்கு எதிர்ப்பு, விவசாயிகள் நலன் காத்திடல், கொரோனாவிற்கு முறையான சிகிச்சை உள்ளிட்டவைகளை வலியுறுத்தி திமுக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியகுளம் நகர துணை செயலாளர் அப்துல் சமது, மாவட்ட மகளிர் அணி மஞ்சுளா முருகன், மாவட்ட எம்ஜிஆர் அணி துணை செயலாளர் தவமணி, எம்ஜிஆர் மன்ற நகர செயலாளர் ராஜவேலு, மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட பிரதிநிதி அன்பு , இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் நாராயணன், தகவல் தொழில் நுட்ப பிரிவு கோவை மண்டல செயலாளர் ராஜகோபால், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் முருகானந்தம் மாவட்டசிறுபான்மையினர் பிரிவு அபுதாஹிர், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் முபாரக், கமல கண்ணன், பெரியகுளம் நகர அவைத் தலைவர் கண்ணன், பொருளாளர் காமராஜ், முத்துப்பாண்டி, பன்னீர்செல்வம்,நகர இலக்கிய அணி செயலாளர் சலீம், நகர தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் சையது ஆசிக் உட்பட கழக நிர்வாகிகள், தொண்டர்கள், சார்பு அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.-தேனி நிருபர்அ.வெள்ளைச்சாமி