மருத்துவம் மக்களை தேடி - விரைவில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை கே.கே.நகரில் விருகம்பாக்கம் தொகுதிகுட்பட்ட பாஜக, அதிமுக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான மா.சுப்பிரமணியன் முன்னிலையில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான பிரபாகர ராஜா மற்றும் பகுதி செயலாளர்கள் கண்ணன், ராஜா ஏற்பாட்டில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிரபாகர ராஜா அவர்கள் பல்வேறு கட்சிகளிலிருந்து திமுக இணைய விரும்புவதாக தெரிவித்தார். முதல்வர் முன்னிலையில் இணைய செய்யலாம் என்றேன். ஆனால் கொரோனா காலம் என்பதால் எளிமையாக இதனை நடத்தியுள்ளார்கள். நீங்கள் மாற்றக் கட்சியில் எவ்வாறு செல்வாக்காக இருந்தீர்கள் என்பதை அறிவோம் , நீங்கள் இணைந்ததில் மகிழ்ச்சி. 10 ஆண்டுகளுக்கான திட்டத்தை அறிவித்து அனைவரும் ஏற்றுக்கொள்கிற தலைவராக திமுக தலைவர் முதல்வர் உள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், விருகம்பாக்கத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் பகுதி செயலாளர்கள் கண்ணன் , ராஜா ஏற்பாட்டில் அதிமுக, பாஜக, தேமுதிக, அமுமக என பல்வேறு கட்சிகளிலிருந்து பொழுக்குழு உறுப்பினர் அவைத்தலைவர் , வட்ட , பகுதி கழக நிர்வாகிகள் தமிழ்நாடு முதல்வரின் சிறப்பான செயல்பாடுகளினால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைகிறார்கள்.