அன்வர்திகான் பேட்டை ரயில் நிலையத்தில் சீசன் டிக்கெட் வழங்க கோரி பொதுமக்கள் ரயில் மறியல்போராட்டம்
அரக்கோணம் அடுத்த
அன்வர்த்திகான்பேட்டை சுற்றியுள்ள குண்ணத்தூர், காட்டுப்பாக்கம், மின்னல்,மேலேரி, மேல்களத்தூர், எலத்தூர்,மேல் ஆவதம் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் அலுவலகங்களிலும்,
தொழிற்சாலைகளில் வேலைக்கு செல்பவர்களும்
தினமும் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு அன்வர்த்திகான்பேட்டை
ரெயில்வே ஸ்டேஷனில் நிற்கும் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்ய சீசன் டிக்கெட் வழங்க கோரி திடிரென இன்று காலை பயணிகள் ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.