PVC ஆதார் கார்டு பெறுவது எப்படி?
நாடு முழுவதும் பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான ஆவணம் என்றால் அது ஆதார் தான். ஒரு இந்திய குடிமகன் தனது தனித்துவமான ஆதார் எண்ணை இலவசமாகப் பெறலாம், அதில் கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கியிருக்கும்.
இது அடையாளச் சான்றாக செயல்படுவதால், ஒருவர் eAadhar, mAadhar, ஆதார் லெட்டர் அல்லது ஒரு ஆதார் கார்டு ஆக பயன்படுத்தலாம், அவை இலவசமாகக் கிடைக்கும். UIDAI இப்போது மற்றொரு வகை ஆதார் கொண்டு வந்துள்ளது – அதுதான் ஆதார் PVC கார்டு.
PVC ஆதார் கார்டு என்றால் என்ன?
ஆதார் PVC கார்டு என்பது ஆதாரின் ஒரு மற்றொரு வடிவம் ஆகும். பயனரின் விவரங்கள் ஹாலோகிராம் கொண்ட பிளாஸ்டிக் கார்டில் அச்சிடப்படும், இது ஆதார் PVC கார்டின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ஒத்ததாக இருக்கும் PVC ஆதார் கார்டு பெற ஒருவர் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தில் கார்டின் அச்சிடுதல், GST மற்றும் விநியோக கட்டணம் ஆகியவை அடங்கும். தொலைபேசி எண்களைப் பதிவுசெய்த பயனர்கள் அவர்களின் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ஆதார் கார்டைப் பெறலாம். மொபைல் எண்ணைப் பதிவு செய்யாதவர்கள் மாற்று மொபைல் எண்ணைப் பயன்படுத்தியும் பெற முடியும்.
ஆன்லைனில் ஆதார் PVC கார்டை ஆர்டர் செய்வது எப்படி?
- உங்களுக்கான ஆதார் PVC கார்டைப் பெற, UIDAI வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும் மற்றும் order Aadhaar reprint என்பதைக் கிளிக் செய்து, பதிவுசெய்த மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTPயைப் பயன்படுத்தி அங்கீகரித்து ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
- கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது UPI என எந்த வழியிலும் நீங்கள் கட்டணம் செலுத்தலாம்.
- கட்டணத்தைச் செலுத்திய பிறகு, வலைத்தளம் ஒரு Airway பில் நம்பரை உருவாக்கும், இது கண்காணிப்பு எண், மேலும் உங்கள் ஆதார் PVC கார்டைக் கண்காணிக்கப் பயன்படுத்தலாம்.
- அச்சிடப்பட்ட ஆதார் PVC கார்டு 5 வேலை நாட்களுக்குள் தபால் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று UIDAI கூறுகிறது. அடுத்த சில நாட்களுக்குள் Speed Post ஐ பயன்படுத்தி வாடிக்கையாளருக்கு இது வழங்கப்படும்.
- அடுத்த சில வாரங்களுக்குள், ஆதார் PVC கார்டு உங்கள் அஞ்சல் முகவரிக்கு வழங்கப்படும். UIDAI கார்டு ஆதார் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மட்டுமே அனுப்பப்படும் என்பதையும் நினைவில் கொள்க, அதை வேறு முகவரிக்கு அனுப்ப முடியாது.
- ஆதார் PVC கார்டின் பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரையில் ஆதார் PVC கார்டில் 3D ஹாலோகிராம், பாதுகாப்பு QR குறியீடு, மைக்ரோ டெக்ஸ்ட், கோஸ்ட் இமேஜ், வெளியீட்டு தேதி, அச்சு தேதி, கில்லோச் பேட்டர்ன் (guilloche pattern) மற்றும் ஒரு பொறிக்கப்பட்ட ஆதார் லோகோ உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும்.
- ஆதார் லெட்டர் நாளடைவில் சேதம் அடையக்கூடும் என்பதாலும், இதன் விலை ரூ.50 மட்டுமே என்பதாலும் நீங்களும் ஆதார் PVC கார்டை வாங்கி பயன்பெறலாம்.