ஆகஸ்ட் 09 ல் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து ஆர்பாட்டம்

 


திருப்பூரில் தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்களின் கூட்டுக்குழு கூட்டத்தில் ஆகஸ்ட் 09 ஒன்றிய மோடி அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட தொமுச உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் கூட்டுக்குழு கூட்டம் மாலை 4 மணி அளவில்  பி.என் ரோடு ஏஐடியுசி பனியன் சங்க அலுவலகத்தில் ஏஐடியுசி மாவட்ட பொருளாளர் பி.ஆர். நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டவர்கள்ஏஐடியுசி மாவட்ட பொது செயலாளர் என் சேகர், சிஐடியு மாவட்ட தலைவர் கே. உண்ணிகிருஷ்ணன் ,சிஐடியு மாவட்ட பொது செயலாளர் கே. ரங்கராஜன் , எல்பிஎப் மாவட்ட துணை தலைவர் ஆர். ரெங்கசாமி, மின்சார வாரிய தொமுச செயலாளர் ஈ.பி .அ.சரவணன், ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் சிவசாமி, எச் எம் எஸ் மாவட்ட செயலாளர் முத்துசாமி,  எம்எல்எப் பனியன் சங்க செயலாளர் மனோகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் 

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஒன்றிய பி ஜே பி மோடி அரசு இந்தியாவை பாதுகாப்போம் என்ற பெயரில் மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை பங்குகளை விற்பது, தொழிலாளர் நல சட்டங்களை நான்கு தொகுப்புககாக சுருக்கி வருவது, விவசாய விரோத சட்ட திருத்தங்களை திரும்ப பெறுவது,  கொரானா மூன்றாம் அலை மக்களை தாக்கும் முன் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்சா கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் எதிர் வரும் 09-08-2021 அன்று ஏழு இடங்களில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்று முளங்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், அதேபோல் திருப்பூர் ,அவினாசி ஊத்துக்குளி, காங்காயம் தாராபுரம், உடுமலை பல்லடம் உள்ளிட்ட இடங்களில் இது தொட‌ர்பாக கோரிக்கை விளக்க நோட்டீஸ் 50 ஆயிரம் அடித்து பிரச்சாரம் மேற்கொள்வது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்