பிளிப்கார்ட் ஆஃபர் மூலம் கேனான் 300D கேமிரா ஆடர் செய்த பார்சலில் பெயிண்ட் டப்பா இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


சென்னை திருவொற்றியூர் சத்திய மூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த வினோத். இவர் புதுவண்ணாரப்பேட்டை தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று பிளிப்கார்ட் ஆஃபர் மூலம் 28,500 ரூபாய் மதிப்புள்ள கேனான் 300D கேமிரா 26,500ஆடர் செய்துள்ளார்.

கோடக் மகேந்திரா வங்கி மூலம் 12 மாதம் இ.எம்.ஐ தவனை முறையில் கேமிரா வாங்கியுள்ளார். இந்நிலையில், இன்று காலை பிளிப்கார்ட் நிறுவனத்தின் இருந்து பார்சல் டெலிவரி செய்ய வந்த ஊழியர் வினோத்திடம் பார்சலை கொடுத்துள்ளார்.

இதில், சந்தேகம் அடைந்த வினோத் பார்சலை பிரித்து பார்த்தபோது கேனான் கேமிரா சீல் இடப்பட்ட பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் பெயிண்ட் டப்பா மற்றும் பழைய கேமிரா இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து வினோத் இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வினோத்தின் புகாரின் பேரில் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் இதுபோல் கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நபர்களிடம், மோசடி நடந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. எனவே பொது மக்கள் விழிப்புணர்வோடு இருக்க போலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்