புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு : மதுரையில் நகைக்கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டம்
மத்திய அரசின் புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் நகைக்கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
ஹால்மார்க் தர முத்திரை கொண்ட தங்க ஆபரணங்களில் huid எனப்படும் எண் குறியீடு பதிவிடும் முறையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய முறைக்கு தமிழகத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மதுரையில் நகைக்கடைகள் உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக 1500 கடைகள் மூடப்பட்டுள்ளது. காலை முதல் மதியம் வரை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.