நாகத்தம்மன்கோவிலில் ஏழாம் ஆண்டு ஆடித் திருவிழா
வாலாஜாபேட்டை வன்னிவேடு மதுரா பெரியார் நகரில் அமைந்துள்ள நாகத்தம்மன் திருக்ககோவிலின் ஏழாம் ஆண்டு ஆடித் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
வாலாஜா பாலாற்றங்கரையிலிருந்து அம்மன் சிலையுடன் கரகம் ஜோடிக்கப்பட்டு அங்கிருந்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பால் குடங்களை சுமந்து கொண்டு ஊர்வலமாக சென்று வாலாஜாபேட்டை பெரியார் நகரிலுள்ள நாகத்தம்மன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர் அதனைத் தொடர்ந்து இரவில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்
இந்த ஆடி திருவிழாவில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்