இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வாலாஜாபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சுகாதாரத்துறை ஊழியர்கள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சித் தலைவர் கிளாட்சன் புஷ்பராஜ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு
கொரோனா விழிப்புணர்வு பற்றி சிறப்புரையாற்றினார்
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் நோய் தொற்று ஏற்பட்டாலும் இதுவரை யாரும் இறக்கவில்லை, எனவே கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் சமீபகாலமா இறந்துள்ளனர், நோய் தொற்றிலிருந்து பெருமளவு நாமும் நம் குடும்பமும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், ஒரு நாளைக்கு சுமார் இருபது முறையாவது கை சுத்தமாக கழுவ வேண்டும்
முககவசத்தை பற்றி அவர் கூறும் பொழுது கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் தும்மும் பொழுது அந்த நீர் திவலைகளில் லட்சக்கணக்கான வைரசுகள் மறைந்திருக்கின்றன
முக கவசம் அணியாமல் இருந்தாள் இந்த நீர்த்திவலைகள் நமக்குள் சென்று பெருமளவு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது எனவே தமிழ்நாடு அரசு வழிகாட்டும் நெறிமுறைகளை கடைபிடித்தாலே நோய் தொற்றிலிருந்து நாம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாக்க முடியும் என்று கூறினார்
அதனைத் தொடர்ந்து மண்டபத்தில் இருந்து வெளியேறி அனைவரும் அனைவரும் ஒன்று சேர்ந்து கொரோனா விழிப்புணர்வு பதாகைகளை எந்தி கொண்டு துண்டுப்பிரசுரங்களை வினியோகம் செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் கிளாஸ் டோன் புஷ்பராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்
பஜார் வீதி முழுவதும் நடந்து சென்று விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன் வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் வாலாஜா பேட்டை காவல் ஆய்வாளர் காண்டீபன் பேரிடர் மேலாண்மை துறை வட்டாட்சியர் காமாட்சி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாகிகள் தொழிலதிபர் அக்பர் ஷரிப், டி.கே.குமார் மற்றும் மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.