முக்கியச் செய்திகள்: வெள்ளை அறிக்கை... பாஜகவில் ராஜேந்திர பாலாஜி...தி.நகர் திறப்பு... இன்னும் பல!


* தமிழ்நாடு நிதிநிலை குறித்து இன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது. அதிமுக ஆட்சியில் நடந்த வரவு, செலவு, வருவாய் இழப்பு மற்றும் மாநிலத்தின் கடன் நிலை பற்றிய விவரங்கள் வெளியாகிறது.

* அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.  டெல்லியில் மூத்தத் தலைவர்கள் முன்னிலையில் அவர் இன்று பாஜகவில் சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

* ஜப்பானின் டோக்கியோவில் ஜூலை 23ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா கண்கவர் கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கையுடன் நிறைவடைந்தது. பதக்க பட்டியலில் 113 பதக்கங்களுடன் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. ஒரு தங்கம் உள்பட 7 பதக்கங்களுடன் இந்தியா 48ஆவது இடம் பிடித்துள்ளது.

* 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 13ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

* இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. தொடர் மழை காரணமாக 5ஆம் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டு போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

* தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1956 ( நேற்றுமுன் தினம் - 1,985)  பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,73,308 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 241 பேரும், சென்னையில் 187 பேரும்,ஈரோடில் 185 பேரும்,, செங்கல்பட்டில் 105 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 

* பட்டியலின மக்களை நோக்கி வன்மமாக பேசிய வழக்கில் நடிகை மீராமிதுன் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

* பார்சிலோனா அணியிலிருந்து ஜாம்பவான் வீரர் மெஸ்ஸி கண்ணீருடன் பிரியாவிடை பெற்றார்.

* கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து போட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று  ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

* தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி (84) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

* கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக சேலம், ஈரோடு மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

* சென்னையில் தி.நகர், ஜாம் பஜார், பாரிமுனை, அரும்பாக்கம் உள்ளிட்ட 9 பகுதிகளில் இன்று முதல் கடைகள் இயங்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்