ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தீபாசத்தியன் பெற்றுக்கொண்டார்
ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தீபா சத்தியன் பொறுப்பேற்றுக்கொண்டார் ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தேஷ்முக் சேகர் சஞ்ஜை மதுரைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர தீபா சத்தியன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் இருக்கிறது, இதனடிப்படையில் பார்த்தால் ராணிப்பேட்டை பொருத்தவரையில் ரவுடிசம் அதிகமாக இருக்கின்றது, ரவுடிசம் ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்,
அதனைத் தொடர்ந்து பேசிய அவர் கொரோனா தடுப்பு பணி குறித்து அதிக கவனம் செலுத்தி நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க அதிகமாக மக்கள் கூடும் இடத்தினை கண்காணித்து கூட்டம் கூடுவதை தடுக்கவும், மக்கள் கட்டாயம்
முககவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், வலியுறுத்தப்படும் என்றார்
மாவட்டத்தில் வாகன நெரிசல் அதிகமாக ஏற்படும் பகுதிகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.