திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் சுதந்திர தின விழா இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து தேசியக் கொடி ஏற்றம்
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.திருப்பூர் மாநகரம் பி.என் . ரோடு போயம்பாளையம் பழனிச்சாமி நகரிலுள்ள பள்ளி வாசல் பகுதியில் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது
இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என்ற பாகுபாடு இன்றி, தேச ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
திருப்பூர் போயம்பாளையம் பழனிச்சாமி நகரில் உள்ள பள்ளிவாசலில் தேசிய கொடியேற்றி 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் ஒருங்கிணைந்து தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்திய நிகழ்வு மத நல்லிணக்கம் மட்டுமின்றி தேச ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது.
திருப்பூர் மாநகரம் போயம்பாளையம் பழனிச்சாமி நகரில் உள்ள பள்ளிவாசலில் இன்று ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தேசிய கொடி ஏற்றி வைத்து மாணவ மாணவிகளுக்கும் பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் பழனிச்சாமி நகர் பள்ளிவாசல் நிர்வாகிகள் முகம்மது ரபிக் , பாஷா , அப்பாஸ், கமாலுதீன் , 7 வது வட்ட திமுகழக செயலாளர் தயானந்தம் , திமுகழக வர்த்தக அணி மாவட்ட துணை அமைப்பாளர் வி.வி.ஜி.காந்தி , மின்சார வாரிய தொமுச செயலாளர் ஈ.பி. அ.சரவணன் , சி.பி.ஐ. சசிகுமார் , மற்றும் நிர்வாகிகள்,ஊர் பொதுமக்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்..