கடலூர் RTO A.முக்கண்ணனுக்கு புரோக்கர்களால் அச்சுறுத்தல்

 


கடலூர் கரையேறவிட்டகுப்பம் கேப்பர் மலை என்ற இடத்தில் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்து அலுவலக பணிகளில்இடைத்தரகர்களால் பொது மக்கள் தங்களுடைய வேலையை நேரடியாக அலுவலகம் சென்று பெற இயலாத அச்சமான சூழல் நிலவி வந்தது 

தமிழக முதல்வர் ஸ்டாலின் , போக்குவரத்து துறை அமைச்சர் , போக்குவரத்து ஆணையர்,மாவட்ட ஆட்சியர்  உள்ளிட்டவர்கள் மிகச் சிறப்பான செயல் திட்டங்களையும் நேர்மையாகவும் மக்கள் இன்னல் படாமல் உரிய அரசு தொகையுடன் பணிகளை மேற்கொண்டு வரும் கடலூர் RTO.க்கு புரோக்கர்கள் மறைமுகமாகவும் கொலை மிரட்டல் ! விடுவித்தும் அங்கங்கே போஸ்டர்கள் அடித்து ஒட்டி RTO முக்கண்ணன் மீது களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்இருந்தும் தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் போக்குவரத்து துறை அமைச்சர் ஆணையர் ,உள்ளிட்டவர்களுக்கு

நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் பொதுமக்களுக்குஆர்டிஓ அலுவலகத்தில் இடைத்தரகர்கள் இருக்க கூடாது மக்களே நேரடியாகத் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய முறையில் பணிகள் மேற்கொண்டு வருவதாகவும் 


தமிழக அரசு RTO அலுவலக சம்பந்தமாக அனைத்து அரசு ஆவணங்களும் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை அதன் வழியாகவே செலுத்தலாம் என்றுதெரிவித்த வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன்இதை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் புரோக்கர்கள் இல்லாமலும் அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் இல்லாமல் திமுக அரசு செயல்படுவதை உறுதி படுத்துகிறது என்றும் 

RTO அலுவலகம்வரும் பொது மக்கள்இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு எளிய முறையில் பயன்பெறும் வகையில் அரசு விதிகளுக்கு உட்பட்டு கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதிய வாகனத்திற்கான பதிவு பழைய வாகனத்திற்கான பெயர் மாற்றம் கனரக வாகன FC புதிய லைசென்ஸ் பெறுதல் ரினிவல் உள்ளிட்டவைகளுக்கு பொதுமக்களே இணையதளம் வழியாக பதிவு செய்து நேரடியாகவும் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசு பல்வேறு எளிய முறைகளை ஏற்படுத்தி உள்ளது ஆனால் பல ஆண்டுகளாக


கடலூரில்புரோக்கர்கள் RTO அலுவலகம் அருகே டேபிள்,சேர் போட்டுக் கொண்டு மக்களிடம் கூடுதல் தொகையாக வசூலித்து வருவதாக RTO வக்கு தொடர்ந்து வந்த புகாரின் அடிப்படையில் அரசு ஊழியர்கள் லஞ்சம்களை தவிர்க்க புரோக்கர்கள் இல்லாமல் நேர்மையாக மக்கள் நேரடியாக பணிகளை மேற்கொள்ளும் வகையிலும் 

 உரிய நபர்களே நேரடியாககோப்புகளை கையாள்வது, இணையதளம் வழியாக பயன்படுத்துவது உள்ளிட்ட பணிகளை பொதுமக்களே பயன்படுத்தி வருகின்றனர்

இதனால் சாதாரண ஏழைகளுக்கும் அரசு அலுவலகத்தை நாடினால், மிக எளிதாக நடக்கும் பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் இதனால் பொதுமக்கள் RTO முக்கண்ணனை வாழ்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

கடலூர் மாவட்ட பொது மக்கள் நேரடியாக RTO அலுவலகத்தில் எளிய முறையில் பயன்பாடுகள் பெற அலுவலகத்தின் வெளியே அமைந்துள்ள புரோக்கர்கள் மீது பொது மக்களை ஏமாற்றுதல் அரசு விதி முறைகளுக்கு அப்பால் செயல்படுதல் அதிகாரிகளை மிரட்டுதல் அரசு பணிகளை செய்ய விடாமல் தடுப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து இடைதரகர்களின் அலுவலகங்களை சீல் வைத்தால் மட்டுமே பொதுமக்கள் நேரடியாக அரசு துறைகளை நாட முடியும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கருத்து RTO.  A.முக்கண்ணனுக்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாராட்டு தெரிவிக்கின்றனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்